பூமியெங்கும் .............

on Saturday 28 May 2011


ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!

on


உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் , 
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன்  இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது !

கனவு தேவதை .........

on


கனவு தேவதை 

தூங்க எத்தனிக்கும் நிமிடம் 

மூளையிலிருந்து ஒரு காதல் கவிதை 

வந்து விழுந்தது 

படிக்க நினைத்து 

விரித்துப் பார்கையில் 

குடைப் பிடித்துச் சென்ற 

தேவதை ஒருவளின் 

பாதங்கள் மட்டுமே பதிந்திருந்தது ....

நனைந்த நினைவுகளோடும்… ..

on Friday 27 May 2011


சிறு சிறு

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…

என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்

இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…

நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்

பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை

நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்

ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது

           

‘குழி’ விழுந்த கன்னங்களில் …………

on


மூச்சு முட்ட
என்னவளை இறுக
அணைத்தேன்  அவள்

‘குழி’ விழுந்த கன்னங்களில் …………

முழுக்க முழுக்க
முத்தத்தால் நிரப்ப
முற்பட்ட வேளை
சற்றே முகம் சுருக்கி  …………

தள்ளியே இருங்கள்
இப்போதைக்கு  எனக்கு
இதில் ஒன்றும் உடன்பாடில்லையென்று ………..
சலிப்புடன்

காரணம் கேட்கும்
நேரமல்ல  இது
என்னையறியாமலே
வெட்கப்பட்டேன்…………

எப்போதும் போலவே
அவளை ஆசையோடு
நெருன்கினேனே- ஏன்
நெருப்பாய்  நடந்துகொண்டாள்…….

அப்போதுதான் புரிந்தது
கடைப்பக்கம் சென்றபோது
காட்டிய  ‘பட்டுச்சேலை’ 
வாங்கிக்கொடுக்காது விட்டதுதான் ………………

நிஜமாகுமுன் கடலுடன்....................

on


விழி’ களில்  ‘விழா’ க்கோலம் கொண்ட

ஒரு  ‘காதல்’ ஜோடியின்  ‘கனவு’
நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த   ‘கதை’… …………..



‘ரைற்றானிக்’ (TITANIC)  மனித இனம்
மறந்திடாது   மனசுக்குள்   இன்னும்
பூட்டிவைத்திருக்கும்  ‘மௌனம்’ கலந்த
முதற்பயணமும்,  முடிவுப்பயணமும்……………………..

தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்

ஓடி ஒளிந்த போதும்   ஓயாத நினைவலையாக
ஒவ்வொருவர் மனக்கண் முன்னே வந்துநிற்கும்
ஆழப்பனிக்கடலுக்குள் அடங்கிப்போன

ஆயிரத்து ஐநூற்று அறுவரின்

மூச்சுக்காற்றால்  உறைந்து போன
அந்தக்கப்பலின் பயணக்கதை
இன்றும்  ‘கண்ணீர்’ கலந்த உப்புக் காற்றோடு………………..

மரணங்கள்   எமக்கொன்றும் புதிதல்ல

இருந்தபோதும்  இந்தமரணங்கள்  ‘மனிதன்’ 
வாழும் வரை இறக்காது உயிர்வாழும்
ஏனெனில் இவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்……….

காதலில் தன் சுய நலத்துக்காக ............

on


காதலில் தன் சுய நலத்துக்காக 
யார் ஒருவர் யாரை எமாற்றுகிறார்களோ 
அவரால் ஏமாற்றப்பாடுபவரின் 
வாழ்க்கை காப்பற்றப்படுகிறது

அதே வேளை எமாற்றுபவரது 
வாழ்கை படு குழியில் அவராலே தள்ளப்படுகிறது
காதல் தோல்வியில் 
தற்கொலை செய்துகொள்பவர் 
எமற்றியவராக இருக்க வேண்டுமே தவிர 
ஏமாந்தவர் அல்ல

தேவைபட்டால் ஏமாற்றியவர் 
முன் வாழ்ந்து காடடி எமற்றியவரை
மனதார தற்கொலை செய்ய வை
அப்போது உன் வாழ்க்கைக்கு 
ஒரு அர்த்தம் கிடைக்கும்

நீ கோழை என்றால் 
காதலில் எமார்ந்ததும் 
உடனடியாகவே தற்கொலை செய்துகொள்...


on



பெண்ணே 
உன் இதயத்தை தருவாயா
என் இதயம் 
என்னுடன் தினமும்

சண்டை போடுகிறது 
உன் இதயம் 
வேணும் என்று...   

காதலைப் பிரிக்க ................

on Thursday 26 May 2011


உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட
முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது

பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்.......

வாழ்க்கையின் இனிமையை...

on


அழகை மட்டுமல்ல




கண்ணீரையும் 



கண்கள் ருசிகட்டும்.



சுகம் மட்டுமல்ல

சோகமும்
வாழ்வில் உணரபடட்டும். 
வலி அறிந்தால்                                                     உணர முடியும் 
சுகம் என்னும் சுவையை...
துன்பம் வந்தால்
ரசிக்க தெரியும்
வாழ்க்கையின் இனிமையை...இன்பம் 
மட்டுமே வாழ்வானால்
அதில் ஏது இன்பம் 
சுகம் கண்ட விழி
ஓர் நாள்
சோகமும் பெற்று தெளி..

உன்னோடு சிரித்து பேசியே............

on


அயல் மொழியையும்
 எளிதில் கற்றுக்கொன்டேன்.


 கலாச்சார உடையிலிருந்து 
நாகரீக உடைக்கு மாறினேன். 


 நம் காதலை கவிதை 
எழுதி கவிஞன் ஆனேன்.


 அலைபேசியை 
மணிக்கணக்கில் உபயோகித்தேன். 


 உன்னைப்பற்றியே எப்போதும் மனதில் 
நினைத்துக் கொண்டிருந்தேன். 


 உன்னோடு சிரித்து பேசியே
 என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.


 உன்னுடைய வேலையையும்
 நானே பார்த்துக்கொண்டேன்.


 நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
 உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.


 உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
 ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன். 


 கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
 தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன். 


 உன் ஆடையையும் 
அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன். 


 நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
 சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன். 


 இவையனைத்தும்
 உன்னைக் காதலித்ததால்.
.

இன்னும் ஓர் உயிர் .........

on



என் இதயச்சிரிப்பு 
சிரித்து கொண்டு இருக்கின்றேன்
கண்களில் கண்ணீருடன் !!!


நீ என்னை விட்டு சென்ற கணம் முதல்
நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!!                                

காதலியே......

on


என் கனவினில் வந்தாய் 
தூக்கம் தொலைத்தேன்! 

என் நினைவினில் வந்தாய் 
நிதானம் இழந்தேன்! 

எப்போது என் எதிரில் வருவாய் 
என எதிர்பாத்திருந்தேன்! 

வந்தது உன்னிடமிருந்து 
அந்த தொலைபேசி அழைப்பு! 

நீதானா என நிதானிப்பதற்குள் 
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு! 

நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பை 
மட்டும் அல்ல என்னையும்தான்.......!!

தேவதை.............

on


தேடுகிறேன் என் தேவதையை 

வாழுகிறேன் அவள் நினைவில் 

கனவில் தினமும் கலந்துவிட்டு 

காற்றாய் தினமும் மறைகின்றாள் 

நிச்சயம் ஒரு நாள் நேரில் வருவாள் 

அவள் காதல் சொல்லவே..........

காதல் வசம்....

on



என் கண் காணா உன் உடல் மச்சம் 
அதை காண துடிக்கவில்லை என் நெஞ்சம்.. 
காதல் முன் காமம் துச்சம் 
பெண்ணே இன்னும் ஏன் அச்சம்? 

இருட்டில் எய்யப்படும் ஈட்டி கூட 
இலக்கை தாக்கும் என்பார்கள். 
இதை குருட்டு காதல் என நினைக்காதே 
விரைவில் இடம் பிடிப்பேன் உன் உள்ளத்தில் நானே.. 

என் இதயம் துடிக்கவில்லை 
நீ வைத்த காதல் பொறியால் அது 
விட்டு விட்டு வெடிக்கிறது..... 

நீ இல்லாமல் போனால் 
இனி என் குருதி பாய்ச்சலில் 
சகதி தேக்கம்... 

நீ மௌனப்புன்னகை வீசாது போனால் 
என்னுள் ஏதோ எதிர்மறை மாற்றம்.. 

நீ இல்லாத இடமெல்லாம் 
எனக்கு வழியில்லாத மர்ம தேசம்.. 

நீ பார்வை பொளிந்தாலே போதும் 
என் நிழலும் உன்னோடு பேசும்... 

உன்னோடு நான் நின்று ரசித்தால் 
நிலாவிலும் காற்று வீசும்... 

நான் சுவாசிக்கும் காற்றிலும் அன்பே 
காதல் வாசம்... 
நான் உன் காதல் வசம்!!!    

உயர்ந்த நட்பு ..................

on


முனை இன்றி பேனா இல்லை..... 
பூக்கள் இன்றி வசம் இல்லை ......                                                                                                                                                               அது போல் நட்பென்ரி நம் 
வாழ்கையில் சுவர்க்கம் இல்லை...... 
ஏழை என்கேறாக்கள் பாவம் 
அருத்தம் தெரிய வில்லை .... 
சொல்லவா 
இந்த உலகில் மாபெரும் ஏழை 
நண்பர்கள் இல்லாதவர்கள் தான்................. 

என் இதயம்......!

on

நீ நடந்த தடமின்றி 
அமைதியாய் கிடக்கின்றது தெரு.. 
அதிரும் தண்டவாளமாய் 
என் இதயம்......!!!!      

               

விழி அசைந்தால் ....................

on


கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும் 
இனிக்குது இந்த பருவம் .......

அலை அலையாய் ஆசைகளை 
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய் 
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து 
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க......

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன் 
உன்னை படிக்க முடியலையே.........

விழி அசைந்தால் உயிர் அசையும் 
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம் 
என்றும் நிலைக்கும் காலம் முழுதும்.

பெண்மை ஊமையானால் ...................

on

    

பெண்மை ஊமையானால்

 நாணம் மொழியாகும்

 

ஓசை தூங்கும் சாமத்தில் 

உச்சி மீன்கள் மொழியாகும் 


ஆசை தூங்கும் இதயத்தில் 

அசைவு கூட மொழியாகும் ........

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets