அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்
நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய்,
என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய்
உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே,
உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே
மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை,
என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா
போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்
இந்த பெண்மைக்குள் நீ செய்யும் இம்சை யாடையை
என் காதலுக்கு கவிதை என்ற பெயரை தந்திட்டாய்,
என் கவிதைக்கு நீ எப்போ உயிர் ஆகுவாய்.......

0 comments:
Post a Comment