மூச்சு முட்ட
என்னவளை இறுக
அணைத்தேன் அவள்
‘குழி’ விழுந்த கன்னங்களில் …………
முழுக்க முழுக்க
முத்தத்தால் நிரப்ப
முற்பட்ட வேளை
சற்றே முகம் சுருக்கி …………
தள்ளியே இருங்கள்
இப்போதைக்கு எனக்கு
இதில் ஒன்றும் உடன்பாடில்லையென்று ………..
சலிப்புடன்
காரணம் கேட்கும்
நேரமல்ல இது
என்னையறியாமலே
வெட்கப்பட்டேன்…………
எப்போதும் போலவே
அவளை ஆசையோடு
நெருன்கினேனே- ஏன்
நெருப்பாய் நடந்துகொண்டாள்…….
அப்போதுதான் புரிந்தது
கடைப்பக்கம் சென்றபோது
காட்டிய ‘பட்டுச்சேலை’
வாங்கிக்கொடுக்காது விட்டதுதான் ………………



You May Like These too

0 comments:
Post a Comment