உன் வார்த்தைகளை கண்டு.......

on Friday, 3 June 2011


உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்.....

கண்ணாடி பூ ஒன்று ................

on


கண்ணாடி பூ ஒன்று

   சிதறியது இன்று
     முற்க்கள் இதயத்தை
      கீறுவது நியாயமா
 
சிதறியது என் கனவல்ல
என் உயிர் அல்லவா  
உன்னை மறப்பதற்கு 
மருந்து என்ன சொல்
         மரணம் கூட சம்மதமே.....

உயிரேஉன்னிடம் ......................

on



என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... 

இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... 
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... 

எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை 
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... 
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்...

பூமியெங்கும் .............

on Saturday, 28 May 2011


ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!

on


உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் , 
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன்  இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது !

கனவு தேவதை .........

on


கனவு தேவதை 

தூங்க எத்தனிக்கும் நிமிடம் 

மூளையிலிருந்து ஒரு காதல் கவிதை 

வந்து விழுந்தது 

படிக்க நினைத்து 

விரித்துப் பார்கையில் 

குடைப் பிடித்துச் சென்ற 

தேவதை ஒருவளின் 

பாதங்கள் மட்டுமே பதிந்திருந்தது ....

நனைந்த நினைவுகளோடும்… ..

on Friday, 27 May 2011


சிறு சிறு

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…

என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்

இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…

நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்

பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை

நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்

ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது

           

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets